அமேசான், பேடிஎம் செயலிகள் மூலம், சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

புதிய வசதி

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மக்களுக்கு வீடுகளுக்கு சென்று கேஸ் சிலிண்டர்களை விநியோகம் வருகிறது. தமிழகத்தில் தற்போது 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏற்கனவே கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் குரல் வழி தேர்வு, எஸ்.எம்.எஸ்., இணையதளம், மொபைல் செயலி ஆகியவற்றில் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி இருந்து வருகிறது. தற்போது கூடுதல் சேவையாக பேடிஎம், அமேசான் ஆகிய நிறுவனங்களின் செயலி வாயிலாகவும், சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

செயலிகள் மூலம் சிலிண்டர் முன்பதிவு

அதன்படி, அமேசான், பேடிஎம் செயலிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பே பில்’ என்ற பகுதிக்குச் சென்று கேஸ் சிலிண்டர் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்த பின், பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். கேஸ் ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here