பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

வாலு மருமகள்

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்,பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பமாக இருக்கும் இந்த தொடரில் நான்கு மருமகள்களும் ஒற்றுமையாக இருக்கும்படியாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மருமகளான மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரைவிட எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்து வருகிறார். பட்டுனு பேசுவதும், துருதுரு நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தொடரில் மட்டுமில்லாமல் நிஜத்திலேயே அவர் துருதுரு பெண்ணாகவே தான் இருக்கிறார்.

அன்பாக்ஸ்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஹேமா ராஜ்குமார், அடிக்கடி தான் வாங்கும் துணிகள், நகைகளின் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஹேமாவின் கணவர் துபாயில் இருந்து வாங்கி வந்த கேமராவை அன்பாக்ஸ் செய்யும் வீடியோ ஒன்று தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகின்றது.

துபாய் கேமரா

இதுகுறித்து அவர் கூறுகையில், “சமீபத்தில் எனது கணவர் துபாய் சென்றிருந்தார். போகும்போது ஒரு சூட்கேசுடன் தான் போனார். ஆனால் வரும்பொழுது எக்ஸ்ட்ராவாக ஒரு சூட்கேஸ் கொண்டு வந்தார். இப்போது அவர் வீட்டில் இல்லை. அதனால் அவர் கொண்டு வந்த எக்ஸ்ட்ரா சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்… என்று கூறி ஓபன் செய்தார். அதில் கோப்ரா ஹைடெக் கேமரா, இதில் நாம் வீடியோ எவ்வளவு ஷேக் செய்தாலும் வீடியோ ஷேக் இல்லாமல் தெளிவாக காண்பிக்கும். இந்த கேமராவை தண்ணிக்குள் வைத்து வீடியோ சூட் செய்யலாம்… என்று கூறி, அந்த கேமராவின் மதிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது கணவர் வாங்கி வந்த கேம் பாக்ஸை பிரித்து அதையும் அன்பாக்ஸ் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டும், லைக்ஸ்களை அள்ளியும் வருகின்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here