நடிகர் விஜய் வர்மா, தமன்னா இருவரும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஜோடியாக சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினியின் ஜோடி

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. பாலிவுட்டில் பிஸியாகிவிட்டதால் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீப காலமாகவே தமன்னாவை சுற்றி பல காதல் கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

காதலில் தமன்னா?

கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான நாள் முதல் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து எந்த ஒரு மறுப்பையும் இரு தரப்பினரும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஜோடியாக ரொமான்டிக் டின்னர் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தமன்னாவும், விஜய் வர்மாவும் ஜோடியாக சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் காரில் ஒன்றாக புறப்பட்டு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வேகமாக பரவி வருகின்றது. இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2ஆம் பாகத்தில் நடித்து வருகின்றனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் தான் தற்போது காதலாக மாறியுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here