தேவையானவை
இறால் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறுதுண்டு
முருங்கைக்காய் – 1
பீர்க்கங்காய் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
மல்லிதூள் – சிறிதளவு
புளி – சிறிதளவு
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
இறாலை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவையை பொடிப் பொடியாக நறுக்கவும். 5 சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் தக்காளி மற்றும் முருங்கைக்காயை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்த பிறகு, அதில் கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன், அரைத்து வைத்த வெங்காய விழுது, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் முருங்கைக்காய் மற்றும் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதனுடன் இறாலையும், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கிக் கொண்டே, புளியை நன்றாக கரைத்து அதனுடன் ஊற்றி போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்த பின் சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்தால், சுவையான இறால் முருங்கைக்காய் குழம்பு தயார்.
நன்மைகள்
மலட்டுத்தன்மையை போக்கக் கூடியது. இதயத்திற்கு மிகவும் நல்லது. அதிகமாக புரதச் சத்தும், வைட்டமின் D சத்தும் அடங்கியுள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த உணவை தாராளமாக உண்ணலாம்.