மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

மார்கழி மாதம்

மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என நம்பப்படுவதால், ஆண்டுதோறும் அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, வீடுகளிலும், கோயில்களிலும் பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி கோயில்களிலும், வீடுகளிலும் அதிகாலையிலேயே சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

சிறப்பு பூஜைகள்

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 3003 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே திரளானோர் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றனர். பக்தர்களின் பஜனைகளும் கலைக்கட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here