கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால் தான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் என்பதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.