தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தியேக செயலியையும், அதன்மூலம் உறுப்பினர் சேர்க்கும் பணியையும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று தொடங்கி வைத்தார். தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியில் தனது புகைப்படம், பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட விஜய், அக்கட்சியின் முதல் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். இதுதொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையை பாலோ பண்ணி, வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய எனது பயணத்தில் மக்கள் பணி செய்யுங்கள். எங்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட உறுதி மொழியை படியுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் இணையுங்கள்” என நடிகர் விஜய் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here