ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளது.

பிளாக் பஸ்டர் திரைப்படம்

இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘. கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படத்தின் மொத்த பாடல்களும் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யாவின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ அமைந்தது.

ரீ ரிலீஸ்

பல வெற்றிப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. மார்ச் 22 ஆம் தேதி இப்படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது. சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிரம்மாண்ட வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here