ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரும் நிலையில் ‘வீரா’ என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

புதிய தொடர்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் ஜீ தமிழ் சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியிட்டுள்ளது. ‘வீரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் சிபு சூரியன், பேரன்பு வைஷ்ணவி, ரஜினி சீரியல் அருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க பசங்க சிவகுமார், ரஜினி சீரியல் சுபிக்ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கதைக்களம்

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீரா (வைஷ்ணவி) அண்ணனாக நடிக்கும் சிபு சூரியன் ஒரு விபத்தில் இறக்க, எதிர்பாராத விதமாக அருணுக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் நடக்கிறது. இதே குடும்பத்தில் சுபிக்ஷாவும் வாழ வருகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here