கொல்கத்தா கல்லூரியின் சேர்க்கை பட்டியலில் நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் சன்னி லியோன்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அசுடோஷ் கல்லூரி, கடந்த வியாழக்கிழமையன்று தனது இணையதளத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்ததைப் பாரத்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 9513008704 என்ற பதிவு எண்ணிலும், 207777-6666 எனும் வரிசை எண்ணிலும் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடிகை சன்னி லியோன், 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த 4 பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், சன்னி லியோனின் பெயரில் யாரோ வேண்டுமென்றே தவறான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததுள்ளதாகவும், அதை சரிசெய்யுமாறு சேர்க்கைத் துறையிடம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் இந்தப் பட்டியல் குறித்து சன்னி லியோன் டுவீட் ஒனை பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், நீங்கள் எனது வகுப்பில் இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here