விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“துக்ளக் தர்பார்” 

வழக்கமாக அரசியல் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதில்லை. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களே வெளி வருகின்றன. அதிலும் சில தோல்வியே தழுவிகின்றன. ஆனால் அரசியல் படங்களுக்கென தமிழ் சினிமாவில் தனி ரசிகர் கூட்டமும் உண்டு. ஒரு மாஸ் கமர்ஷியல் அரசியல் படங்களை அரம்பித்து வைத்தது மணிவன்னன் தான். இவர் எடுத்த “அமைதிப்படை” திரைப்படம் இன்று உள்ள ரசிகர்களாலும் கூட கொண்டாடப்படுகிறது. இவை ஒரு புறம் இருக்க, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான “முதல்வன்” திரைப்படம், ஒரு புதுவிதமான அரசியலை வெளிப்படுத்தியது. மேலும் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “என்.ஜி.கே” திரைப்படம் சூர்யாவை ஒரு சமூக போராட்டக்காரராக மாற்றியது. விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய “சர்கார்” திரைப்படம், அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கூட்டத்தை ஒன்று திரட்டி கேள்வி கேட்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை காமெடியாக ரசிகர்களுக்கு நன்கு புரியும்படி அமைந்த படம் “எல்.கே.ஜி” என அனைத்துப் படங்களும் மக்களுக்கு விருந்து படைத்தன. தற்போது விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” வேறு ஒரு அரசியலை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே கூட்டணி 

தமிழ் சினிமாவில் நடிப்பாலும், இயக்கத்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ரா. பார்த்திபன். எப்பொழுதும் தனது படங்களில் வித்தியாசத்தை காட்டக் கூடியவர். ஒத்த செருப்பு, சைஸ் ஏழு திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டையே திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பார்த்திபன், விஜய் சேதுபதி கூட்டணி நடிப்பும் பாராட்டப்பட்டது. தற்போது “துக்ளக் தர்பார்” படத்திலும் இதே கூட்டணி தொடர்கிறது. கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் “துக்ளக் தர்பார்” படத்தில், விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் அதிதி ராவ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

துக்ளக் தர்பாரின் பல செய்திகள் அவ்வப்போது வெளிவந்து, சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில், அப்படத்தின் ‘அண்ணாத்த சேதி’ என்ற முதல் பாடல் நேற்று வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியல் சார்ந்த படம் என்பதால் ‘துக்ளக் தர்பார்’ படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடிப்பதில் வல்லவர். விக்ரம் வேதா, பேட்டை படங்களில் அவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். தற்போது விஜய்யுடன் “மாஸ்டர்” படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here