பட வாய்ப்புகள் குறைந்து, உடல்நலம் சரியில்லாத நிலையில் இருக்கும் காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்க நடிகர் ஜீவா உதவி செய்து வருகிறார்.
‘வாமா மின்னல்’
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் பாவா லட்சுமணன். சரத்குமாரின் மாயி படத்தில் இடம்பெற்ற இவர் பேசிய ‘வாமா மின்னல்’ என்ற டயலாக் காமெடி பெரிய ஹிட் ஆனது. இதன்பிறகு சில படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், உடல் நலம் சரியில்லாததாலும் அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
நான் கேட்டதே இல்லை
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன், தனக்கு நடிகர் ஜீவா மாதந்தோறும் ரூ.15,000 அனுப்பி உதவி செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது ஜீவா ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய குடும்ப நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அதற்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப தொடங்கினார். இப்ப வரைக்கும் அனுப்புகிறார். அதுபோல நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, ஆர்.பி. சவுத்ரி சார்தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து என்னுடைய மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார்” என்று எமேஷனலாக கூறினார்.