கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயத்திற்கு 50 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விஜய், விஷால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் இச்சம்பவத்திற்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் எனவும் அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here