இசைக் குறிப்புகளை சேதப்படுத்திவிட்டதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனித்துவமான இசை

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை அனைவரின் மனதிலும் ஒன்றிப்போய்விட்டது. அவரது பாடல்களை கேட்கும் பொழுது கரையாத நெஞ்சமும் கரைந்து போகும். ஒருவன் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பாடலின் இசை பிடிக்கிறது. அதுவே சோகமாக இருக்கும் பொழுது பாடலின் வரிகள் புரிகின்றது. இளையராஜாவின் இசை, பாடல் வரிகளோடு பின்னிப்பிணைந்து அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இசையில், அவரின் பிள்ளைகள் கூட இளையராஜாவை முந்த முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது இசையால் எத்தையோ பாடல்கள் வெற்றி கண்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஸ்டூடியோ

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது ரெகார்டிங் தியேட்டரை நீண்டகாலமாக நடத்தி வருகிறார் இளையராஜா. பல படங்களுக்கு இசையமைத்து அது வெற்றி அடைந்ததை தொடர்ந்து, எல்.வி. பிரசாத் அவருக்கு அந்த இடத்தை பரிசாக அளித்திருந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் இந்த தியேட்டரில் தான் இளையராஜா இசையமைத்தார். ஆனால் சில மாதங்களாக இளையராஜா அந்த இடத்தில் தொடர்ந்து தங்கி வருவதையும், இசை அமைப்பதையும் பிரசாத்தின் வாரிசுகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். அதில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை குறிப்புகள் அனைத்தையும் சாய் பிரசாத் சேதப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here