நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

80’ல் இருந்து தற்போது வரை

1980களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், பல ஹிட் படங்களை கொடுத்தார். கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்து, தனது நடிப்புத் திறனால் அனைவரையும் கட்டிப் போட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் அவரது நடனமும் ரசிகர்களை ஈர்த்தது. ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து சூப்பர் ஸ்டாரை மிரட்டிய காட்சி எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது வெற்றிக் கொடியை நாட்டினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், சீரியல்களிலும், வெப் சீரிஸ்களிலும் பல ஹிட் லிஸ்ட்களை கொடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். குயீன் வெப் தொடர் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். படங்களில் சாதாரண காட்சி பொருளாக மட்டும் நடிக்காமல், தனது கம்பீரமான நடையாளும், கம்பீரமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார். சீரியல்களிலும் இதையே அவர் வெளிப்படுத்தியதால், இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து வெறித்தனமான கைதட்டல்களையும் பெற்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன். பல முன்னணி நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடிக்கும் நடிகைகள் என்று கணக்கிட்டால் அதில் கண்டிப்பாக ரம்யா கிருஷ்ணனும் இருப்பார்.

வளைகாப்பு புகைப்படம்

திரைத்துறை மட்டும் அல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார் நமது நீலாம்பரி. கிருஷ்ண வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு, ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர், சில தினங்களுக்கு முன் தனது பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தன்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பதிவிட்டார். அந்தப் பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் படு குஷி ஆகிவிட்டனர். அதேபோல் தற்போது அவரது வளைகாப்பின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு இன்னும் வயதே ஆகவில்லை என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. அவரது அழகைப் பார்த்து நெட்டிசன்கள் பூரிப்புடன் அந்த புகைப்படத்தை ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here