திரைப்பட தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் நடிகர்களில் ரஜினிகாந்த் மிக முக்கியமானவர் என்றும் அவரது நேர்மை தனக்கு மிகவும் பிடிக்கு எனவும் பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான் ரஜினி. தமிழ் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஜினி, பல தலைமுறைக்கும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். சிறு குழந்தை கூட ரஜினியின் பெயரை கேட்டால் அவரைப் பற்றியும், அவரது படங்களைப் பற்றியும் கதைகளாக கூறுவர். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் ரசிகர்களாகவே திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஜம்பது கோடி, நூறு கோடி, 200 கோடி என பல வசூல் சாதனைகளை நிகழ்த்திய ஒரே நடிகர் ரஜினிகாந்த். இவர் ஒருவர் தான் பிளாக் அண்டு ஒயிட், கலர், மோஷன் பிக்சர் மற்றும் 3டி போன்ற எல்லா விதமான படங்களிலும் நடித்தவர். தற்போது ‘அன்னாத்த’ படத்தில் நடித்து வரும் ரஜினி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தனது பேரன்களுடன் விளையாடி பொழுதை கழித்து வருகிறார்.

ரஜினியின் நேர்மை

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவில் இணைந்து பணியாற்றி வந்த நடராஜன், தமிழ் ரசிகர்களுக்கு பல கதாபாத்திரங்கள் மூலம் அறியப்பட்டவர். காதலை இயக்கும் காவிய இயக்குநர் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அப்பாவாக நடித்து அசத்தி இருந்தார். தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது; எனது மேற்பார்வையில் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு திரைப்படம் உருவானது. அப்படத்திற்காக ரூ. 15 லட்சம் ரஜினிக்கு சம்பளம் தருவதாக கூறி இருந்தோம். ஒரு நாள் ரஜினியை சந்திக்கும் போது, தான் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அப்படத்திற்காக ரூ. 12 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்குவதாகவும் கூறினார். அந்த சம்பளமே போதுமானது எனக்கூறி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டார். திரையுலகில் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு, தான் வாங்கும் சம்பளத்தை குறைத்துக் கொண்ட ரஜினியின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வாறு பிரமிட் நடராஜன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here