சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை வனிதா விளக்கமளித்துள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என தடாலடியாக பதில் அளித்தார் நடிகை வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்பு கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்றனர். அப்போது லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

விஸ்வரூபம் எடுத்த கஸ்தூரி

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்து கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நினைத்த கஸ்தூரி, “கனெக்ட் வித் கஸ்தூரி” என்ற பெயரில் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி, பீட்டர் பாலை வனிதா பேட்டி எடுத்த அதே இடத்தில், ஷூட் ஒன்றை நடத்தி அசத்தினார் கஸ்தூரி. இதுதொடர்பான புரொமோ மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் கஸ்தூரியின் யூடியூப் சேனலில் நேற்று மாலை நடந்த லைவ் நிகழ்ச்சியில், கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், ரவீந்தர் சந்திரசேகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் பங்கேற்று வனிதா விவகாரம் பற்றி விவாதித்தனர்.

வெளியேறிய வனிதா, விமர்சித்த கஸ்தூரி

இதனிடையே, நடிகை வனிதா டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிவிட்டார். இதனை கண்ட கஸ்தூரி கூறியிருப்பதாவது; என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்க? ஏதாவது காக்காவை பார்த்து பயமா இல்லை உண்மைக்கு பயமா?. இப்பொழுது உங்களுக்கு தெரியும். யார் தைரியசாலி, யார் காமெடி பீஸ் என்பதை முடிவு செய்யும் பிக்கஸ்ட் பாஸ் நீங்கள் தான்.
அமைதியாக இருக்குமாறு லக்ஷ்மி மேடம் தான் எனக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் இனியும் முடியாது. ஒரு பெண்ணை மோசமாக பேசி, அவரின் கேரக்டரை அசிங்கப்படுத்துவது குற்றம். திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது நீதிக்கான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

போலியாக இருக்க மாட்டேன்

இந்த நிலையில், டுவிட்டரில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை வனிதா விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது; டுவிட்டர் முழுக்க தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைப்பிரபலங்கள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக்கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள். எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ, பண்பாடோ அல்ல. போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன். நான் ஒருபோதும் போலியாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here