விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அஜித் நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமுக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், அஜித் விருமாண்டியாகவே இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் என்கிற ஆளுமை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித். ரசிகர்கள் அவரை ‘தல’ அஜித் என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். தமிழகத்திலும்,சினிமாவிலும் ‘தல’ என்றால் அது அஜித் தான் என்ற அளவிற்கு அவரது ரசிகர்கள், அவர்மீது பாசம் வைத்துள்ளனர். சினிமா, கார் மற்றும் பைக் ரேஸ், மெக்கானிக், புகைப்படக் கலைஞர், பைலட் என பன்முகம் கொண்டவர் அஜித். இவரை கான ரசிகர்கள் கூட்டம் அலை மோதினாலும், அவர் எங்கும் தென்படமாட்டார். அதன் காரணமாகவே பலருக்கு அஜித்தை பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரியும் நடிகர் தல அஜித்.

மாஸ் காட்டிய அஜித்

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்கள், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. கடந்த வருடம் வெளியான இவ்விரு படங்களும் பெண்களை மிகவும் கவர்ந்தது. தந்தை, மகள் பாசம் ‘விஸ்வாசம்’ என்று ஒரு பக்கம், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் தவறுகளில் இருந்து அவர்களை தனது ‘நேர்கொண்ட பார்வை’யால் காப்பாற்றும் வக்கீல் ஆக ஒரு பக்கம் என இரண்டிலும் கலக்கினார் அஜித். இவரது இந்த இரு படங்களையும் பெண்கள் அதிகம் விரும்பினர். பெண்கள், பெண் குழந்தைகள் சமூகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்றும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் இவ்விரு படங்களிலும் கூறியிருப்பார் தல அஜித்.

விருமாண்டி 2வில் அஜித்?

இந்த வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டுள்ள நிலையில், பல படங்கள் தொடங்க முடியாமலும், சில படங்கள் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையிலும் உள்ளது. இதில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படமும் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில், அஜித் நடிக்க போவதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இதுதொடர்பான புகைப்படம் வெளியானதுடன், அப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்தபோது, அஜித் ரசிகர்களால் அந்தப் புகைப்படம் உருவாக்கபட்டது தெரிய வந்தது. விருமாண்டி படத்தில் அஜித் நடித்தால் வேற லெவலில் இருக்கும் என்பதால் அதனை உருவாக்கியதாகவும், இதில் குங்குமம் பொட்டு வைத்து பார்த்தால் தல அஜித் அப்படியே கமல்ஹாசன் போல இருக்கிறார் என்றும் ரசிகர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here