பீட்டர் பால் முறைப்படி விவாகரத்து பெற்ற பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள் என்று நடிகை வனிதாவிற்கு சனம் ஷெட்டி அறிவுரை கூறியுள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என தடாலடியாக பதில் அளித்தார் நடிகை வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்பு கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்றனர். அப்போது வயது வித்தியாசம் கூட பார்க்காமல் லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

கஸ்தூரி பதிலடி

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்து கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். நடிகை வனிதா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அதற்கு பல சப்ஸ்கிரைபர்களும் குவிந்தனர். அதனைப்பார்த்து பொறாமை பட்டு நீங்கள் எல்லாம் இப்படி பேசுகிறீர்கள் என்று நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விளாசித் தள்ளினார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நினைத்த கஸ்தூரி, “கனெக்ட் வித் கஸ்தூரி” என்ற பெயரில் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் பதிவிட்ட முதல் புரொமோவே ரசிகர்களை அதிர வைத்தது. பீட்டர் பாலை வனிதா பேட்டி எடுத்த அதே இடத்தில், ஷூட் ஒன்றை நடத்தி அசத்தினார் கஸ்தூரி. இதுதொடர்பான புரொமோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

நீங்கள் பேசியது தவறு

இதனிடையே, வனிதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது; வனிமா உங்களுடைய சமீபத்திய வீடியோவை பார்த்தேன். அதில் நீங்கள் பேசியது தவறு. எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது நீங்கள் குரல் கொடுத்தீர்கள். இப்போ தப்ப நீங்க பண்ணா சரியாகிவிடுமா?. பீட்டர் பாலின் மனைவிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள். இவ்வாறு சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here