ஸ்ரீதேவி ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தில் நடித்தபோது நடிகர் சஞ்சய் தத் மதுபோதையில் அவரது அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செந்துரப்பூவே ஸ்ரீதேவி

தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட் திரையுலகயே கலக்கியவர் ஸ்ரீதேவி. எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ஸ்ரீதேவி, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றோருடன் ஜோடி சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஸ்ரீ தேவி. கடந்த 2018 ஆம் ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்க துபாய் சென்ற அவர், அங்கு திடீரென மரணமடைந்தார்.

மஹா நடிகன்

இந்தி திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள சஞ்சய் தத், அவரது ரசிகர்களால் சஞ்சய் பாபா என்று செல்லமாக அழைக்கப்படுவார். கான்கள் மற்றும் கப்பூர்களுக்கு நடுவில் தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் தான் சஞ்சய் சத். இவரும் குழந்தை நட்சத்திரமாகவே தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவரது படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் அளவிற்கு இருந்தது. இவர் நடித்த ‘ராக்கி’ திரைப்படம் அந்த காலகட்டத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக இருந்தது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும், சஞ்சய் தத்க்கு அவரது ரசிகர்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி அறையில் சஞ்சய் தத்!

கடந்த 1983 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி மற்றும் ஜிதேந்திரா நடிப்பில் வெளியான ‘ஹிம்மத்வாலா’ படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தின் ஷூட்டிங் போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் பலர் ரசிகர்களாக இருந்தனர். அதில் சஞ்சய் தத்தும் ஒருவர். ‘ஹிம்மத்வாலா’ படப்பிடிப்பு நடந்த அதே ஊரில் தான் சஞ்சய் தத் நடித்த பட ஷூட்டிங்கும் நடந்தது. அங்கு பிரபல ஹோட்டலில் ஸ்ரீதேவி தங்கி இருந்தது சஞ்சய் தத்க்கு தெரியவந்துள்ளது. அப்போது வரை ஸ்ரீதேவியை நேரில் பார்த்திராத சஞ்சய் தத், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த சஞ்சய்தத், ஸ்ரீதேவி அறையின் கதவை தட்டினார். ஸ்ரீதேவி கதவை திறந்ததும் உள்ளே செல்ல முயன்றுள்ளார் சஞ்சய். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி உடனே கதவை மூடியுள்ளார். சஞ்சய் தத்தை முதல்முறையாக மதுபோதையில் இருந்ததை பார்த்த ஸ்ரீதேவி, அவருடன் இணைந்து பணியாற்ற நடிக்க பயப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சரியாக பத்து ஆண்டுகள் கழித்து இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் அப்படம் சரியாக ஓடவில்லை. ஸ்ரீதேவி அறையில் சஞ்சய் தத் நுழைய முயன்ற சம்பவம் தற்போது வெளிவந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here