கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று அதிகாலை காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனிடையே, பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தமிழில் கண்டனம்

இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here