கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது பாணியில் காமெடியாக அளித்த பதில் டிரெண்ட் ஆகி வருகிறது.

முயற்சியால் முன்னேறிய நடிகர்

சிவகார்த்திகேயன் என்றாலே நக்கலும், நையாண்டியும் தான். அந்த அளவுக்கு கவுண்டர் டயலாக்கில் கைதேர்ந்தவர் சிவா. டிவி ஆங்கராக இருந்து, தற்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் கடுமையான உழைப்பால் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவரது நடிப்புத் திறமையும், நக்கலான பேச்சும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்தது. குழந்தைகளை ரசிகர்களாக ஈர்த்ததுதான் இவரது கேரியருக்கு மிகப்பெரிய ஹிட். எப்போதும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்காமல், நீண்ட நாட்களுக்கு ஒருமுறை புகைப்படம் போட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்த சிவகார்த்திகேயன், தற்போது ‘டாக்டர்’ படத்தின் அப்டேட்டுகளை தெரிவித்து வருகிறார்.

மாசா வந்த அப்டேட்

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் ,பாடலாசிரியராகவும் பன்முகத் திறமைகள் கொண்டு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘டாக்டர்’ படத்தில் “செல்லம்மா” என்ற பாடலை சிவ கார்த்திகேயனே எழுதி இருக்கிறார் என்பதை அறிந்த பலர், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கவிஞரே பயங்கர பார்ம் போல.. செம கெத்து சாங் அனிருத்.. அராஜகம் பண்றீங்க நெல்சன்.. என்று கூறிப்பிட்டிருந்தார். இதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கையில்; “நன்றி ப்ரோ.. ப்ளீஸ் என்ன கவிஞர்னு எல்லாம் சொல்லாதீங்க.. தாத்தா கனவுல வந்து உங்களை அடிப்பாங்க” என்று காமெடியாக கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here