பிரபல நடிகை ரம்யா நம்பீசன் “சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்” என்ற பெயரில் சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்க உள்ளார்.

அழகான கதாபாத்திரம்

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், பாடகியாகவும் திகழ்கிறார். கிட்டதிட்ட 55 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், பல பாடல்களையும் பாடியிருக்கிறார் .ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், உத்தமபுத்திரன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீசா போன்ற பல படங்களில் நடித்தார். இருப்பினும் “சேதுபதி” என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு சத்யா, சத்யன், சீதக்காதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் மட்டும் தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். கொரோனா சமயத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் அவர், சமூக வலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் பலப்பல சினிமாப் பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார்.

புது முயற்சி

ரம்யா நம்பீசன் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்துடன் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்தி வரும் அவர், இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து, ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார். எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை. சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை வழங்கும் நிகழ்ச்சி இது.

பிரபலங்கள் பாராட்டு

இந்த நிகழ்ச்சி குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில்; “நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம். இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை. இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here