பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ள பிரபல நடிகை நித்யா மேனன் ஒரு பெண்ணுக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

லிப் லாக் சர்ச்சை

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்தியில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ள வெப் தொடர் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரீத் இன் டு த ஷேடோஸ்’ என்ற அந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் நடிகை நித்யா மேனன், மற்றொரு நடிகையான ஸ்ருதி பாப்னா என்பவருடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். காருக்குள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்தக் காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

நித்யாமேனன் ஏற்கனவே தெலுங்கில் ‘ஆ’ என்ற படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்திருப்பார். அதுபோல தற்போதும் வெப் சீரிஸில் நடித்ததற்கான காரணம் என்னவென்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியாக உடை அணிய மறுக்கும் நித்யா மேனன், இப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்திருப்பது வியப்பாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here