மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சரா” படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

கனவு நாயகன்

சினிமாவில் ஒவ்வொரு மொழிக்கும் தனி ரசிகர்கள் உண்டு மற்றும் தனி ஸ்டைல் உண்டு. அந்த வரிசையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது பாலிவுட் திரையுலகம் தான். அந்த பாலிவுட்டில் பல கான்களும், பல கப்பூர்களும் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நிகராக ஒரு நடிகர் வளர்ந்து வந்தார் என்றால் அது சுஷாந்த் சிங் ராஜ்புத் தான். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆரம்பத்தில் சிறிய படங்களில் நடித்து வந்த சுஷாந்த் சிங், பின்னர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததில் மூலம் பிரபலமானார். அப்படத்தில் சுஷாந்த் பேசிய வசனங்கள் மற்றும் தோனியாகவே நடித்த விதம் என அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை புரிந்தது.

உலகையே உலுக்கிய மரணம்

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் செய்தி சுஷாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுஷாந்த் மறைவால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள், சினிமா பின்புலம் உள்ள நடிகர்கள், நடிகைகள் தான் அவரது மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடைசி திரைப்படம்

இதனிடையே, சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் “தில் பெச்சரா”. இப்படம் OTT தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே சாதனையை நிகழ்த்தியது. இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லரில் முதல் இடத்தில் இருப்பது இப்படம் தான். தற்போது அனைவரும் எதிர்பார்த்த “தில் பெச்சரா” படத்தில் இடம்பெற்ற ஒரு ரொமேன்டிக் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைத்துள்ள இப்பாடலை, மோகித் மற்றும் ஸ்ரேயா கோஷால் பாடியுள்ளனர். அமிதாப் பட்டாச்சாரியா வரிகள் அனைத்தும் சுஷாந்த்யை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்தப் பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்த்துள்ளனர். யூடியூபில் இந்தப் பாடல் சுஷாந்த் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here