நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனக்கு இருக்கும் கெட்டப் பழக்கங்களை பற்றி வெளிப்படையாக கூறி உள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லை

திரைப்பட நடிகையும், பஞ்சாப் மாடல் அழகியுமான யாஷிகா ஆனந்த், ‘கவலை வேண்டாம்’ படத்தில் சின்ன வயது ஜீவாவிற்கு நீச்சல் சொல்லித்தரும் பயிற்சியாளராக ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் தான் அவரை மிகப்பெரிய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதற்குபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மிகவும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். அந்த நிகழ்ச்சிக்குப் பின் அதிகளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில படங்கள் மட்டுமே அவரது கைவசம் உள்ளது.

விநோத விளையாட்டு

சமூக வலைத்தளங்களில் யாஷிகா ஆனந்த் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவற்றுக்கு அதிகளவில் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்திமாவுடன் சேர்ந்து Never Have I Ever என்ற கேம்மை விளையாடி உள்ளார். அந்த வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த கேம்மை விளையாடும்போது கூறப்படும் கேள்விகளுக்கு ‘நான் செய்திருக்கிறேன்’ அல்லது ‘நான் செய்ததே இல்லை’ என்ற பதிலை காண்பிக்க வேண்டும். அப்போது யாஷிகா, தான் இதுவரை செய்துள்ள பல்வேறு மோசமான விஷயங்கள் பற்றி வெளிப்படையாகவே கூறி உள்ளார்.

கெட்டப் பழக்கங்கள்!

குளிக்காமல் 24 மணிநேரம் இருந்திருக்கிறேன், ஆண்களின் கழிப்பறைக்கு சென்று இருக்கிறேன், எனக்கு பாய் பிரண்டு இருக்கிறது என மற்றவர்களிடம் பொய் சொல்லி இருக்கிறேன், போலி ஐடி பயன்படுத்தி இருக்கிறேன், தொடர்ந்து 100 செல்ஃபி எடுத்திருக்கிறேன் என்பன போன்ற உண்மைகளை யாஷிகா கூறியுள்ளார். மேலும் நண்பரது போனை திருட்டுத்தனமாக பார்த்ததையும் அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். தான் காஸ்மெட்டிக் சர்ஜரி இதுவரை செய்ததே இல்லை என்றும் தன்னுடைய முகத்தை ஷேவ் செய்தது இல்லை என்றும் கூறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த யாஷிகாவின் ரசிகர்கள், அவரது இன்ஸ்டாகிராமில் பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here