தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின்தொடர தனக்கு விருப்பமில்லை என கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் மனதை களவாடிய நடிகை

களவானி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஒவியா. இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை களவாடிய ஒவியா, அதன்பின் மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் மாறி மாறி நடித்து வந்தார். சிவகார்த்திகேயனுடன் மெரினா, சுந்தர்.சியின் கலகலப்பு ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தியது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானை கூட்டம்’ திரைப்படத்தில் நடித்தார் ஓவியா. அதில் வரும் “கொன கொண்ட காரி” பாடல் ரசிகர்களை குத்தாட்டாம் போட வைத்தது. மேலும் அந்த பாடலில் ஒவியாவை காட்சிபடுத்திய விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதற்குபின் பல படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் சற்று வேதனையில் உள்ளனர்.

விருப்பமில்லை

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளமே ஓவியாவுக்கு உருவானது. அவருக்காக ஆர்மி எல்லாம் உருவாக்கினார்கள். பிக்பாஸ் முடியும் வரை ஒவியா டிரெண்டாகி இருந்தார். ஓவியா என்றாலே ஸ்டைல் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது உடையும், ஹேர் ஸ்டைலும் பிரபலமானது. பார்க்கும் இடத்திலெல்லாம் ஓவியா ஹேர் ஸ்டைல் தான் இருந்தது. அந்த அளவிற்கு இளைஞர்கள் பல பேரை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் ஓவியா. டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஓவியா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு கேள்வி தற்போது வைரல் ஆகி வருகிறது. டுவிட்டரில் ஏன் எவரையும் நீங்கள் பின் தொடரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஓவியா, மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here