தனது வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

சர்ச்சை திருமணம்

கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து இன்றுவரை வனிதா பேச்சுப்பொருளாக மாறிவிட்டார். சமூக வலைத்தளங்களில் வனிதாவை பற்றிய பேச்சு அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க பீட்டர் பால் முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவரது முதல் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனது கணவர் தனக்கு வேண்டுமெனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

விமர்சனம்

இவர்களது திருமணம் குறித்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சிக்க, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என திரைப் பிரபலங்களும் விமர்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வனிதா விஜயகுமார், தன்னுடைய திருமணத்தை பற்றி பேச நீங்கள் யார் என்று கடுமையாக சாடினார். இதனால் இருவரும் தாங்கள் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டனர். பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனும் வனிதாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில்வனிதாவின் திருமணம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும் எந்த சட்டமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்தார் வனிதா.

வனிதா உருக்கம்

தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக நாடே முடங்கியுள்ளது. இதனால் லாக்டவுன் நேரத்தில் வீடுகளில் இருக்கும் மக்கள் தங்கள் போக்கிற்கு சமூக வலைதளங்களில் அந்த அந்த காலகட்டத்தில் நிகழும் நிகழ்விற்கு கருத்துக்களைத் பதிவிட்டு வருகின்றனர். வனிதாவின் விஷயத்தைதிலும் அதனையே செய்தனர். இதனால் மனமுடைந்த நடிகை வனிதா சமூக வலைத்தளவாசிகளுக்காக ஒரு பதிவை வெளியிட்டுகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது; உண்மை என்னவென்று தெரியாமல் என்னை குறை சொல்லாதீர்கள். என்னை இவ்வாறு தவறாக பேசுவதற்கோ அல்லது கேளி செய்வதற்கோ முன்பு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இணைய வழியில் என்ன கருத்தை வேண்டுமானாலும் பதிவிடலாம் யார் என்ன கேட்க போகிறார்கள் என்று எதனை வேண்டுமானாலும் பதிவிடுகிறீர்கள். இதுபோன்ற விஷயங்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி ஏதேனும் விபரீதமாக செய்து கொண்டால் அதற்கு முழு காரணம் நீங்கள்தான். நான் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை நான் அனுபவிப்பேன். கடவுள் இருக்கிறார் என்று நம்புபவள் நான், நான் யார் என்று சரியான நேரத்தில் உங்களுக்கு நிரூபிப்பேன். இவ்வாறு வனிதா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here