உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்திற்கு கமல்ஹாசன் உதவி செய்து வருகிறார்.

தீவிர சிகிச்சை

தமிழ் உள்பட பல மொழித் திரைப்படங்களில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பொன்னம்பலம். இவர் சமீபத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2ல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார். மேலும் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறார்.

கமல் உதவி

உடல்நலக்குறைவால் பொன்னம்பலம் அவதிப்பட்டு வரும் நிலையில், சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் பொன்னம்பலம் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். கமல்ஹாசனுடன் ’வெற்றி விழா’, ‘இந்தியன்’, ‘மைக்கேல் மதன காமராஜன் உள்பட திரைப்படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here