நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர்.

வைகைப் புயல்

தமிழ் சினிமாவில் வைகைப் புயல் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது காமெடியை ரசிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் வடிவேலு கால் பதித்தார். தேர்தல் நேரங்களில் தனக்கே உண்டான தனி பாணியில் அவர் பிரச்சாரம் செய்தது பொதுமக்களை ஈர்த்தது. ஆனால் அதன்பிறகு பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் அவர் சந்தித்தார். பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்

வடிவேலு தேவையின்றி அரசியலில் குதித்ததால் தான், படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் கூறிவந்த நிலையில், அவர் எப்பொழுது ரீ என்ட்ரி கொடுப்பாரென ரசிகர்கள் நாளுக்கு நாள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், நிறைய படங்களை கையில் வைத்திருப்பதாக வடிவேலு கூறியுள்ளார். தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கமல்ஹாசனுடன் கைகோர்த்து உள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சிவாஜியுடன் நடித்த வடிவேலு, அவரிடமே நடிப்பிற்காக பாராட்டுகளையும், கைதட்டல்களையும் பெற்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் வடிவேலு கைகோர்த்து உள்ளார்.

காமெடி கிங்

சுந்தர் சி, வடிவேலு நடிப்பில் வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் எடுக்கப்பட உள்ளது. இதில் வரும் ‘நாய் சேகர்’ என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. வடிவேலு இல்லை என்றால் தலைநகரம் படத்தின் வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனக்கூறும் அளவிற்கு காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். இதுதவிர ஒரு சில வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு. அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here