‘பாசிகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை கஜோல் ரொம்ப மோசம் என ஷாருக்கான விமர்சித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மனம் கவர்ந்த படம்
ஹிந்தி மொழி தெரியாதவர்களை கூட ஹிந்தியில் உங்களுக்கு பிடித்தப் படம் எது என்று கேட்டால், “குச் குச் ஹோத்தா ஹே” என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான படம் அது. கரண் ஜோஹர் இயக்கத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கஜோல் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த படம் “குச் குச் ஹோத்தா ஹே”. இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும் அப்படத்தை பார்த்தால் அனைவரும் ரசிக்கும் வண்ணம்தான் இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதுடன், கஜோல், ராணிமுகர்ஜி போன்று அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் அவ்வப்போது உலா வந்து கொண்டிருக்கும் வேலையில், சமீபத்தில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
படக்குழு அதிர்ச்சி
“குச் குச் ஹோத்தா ஹே” படத்தில் இடம்பெற்றிருக்கும் “ஏ லட்கா தீவானா” என்ற பாடல் காட்சியில் கஜோல் சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்து காயம் அடைந்து இருக்கிறார். பின்னர் சுமார் ஒரு மணி நேரமாக அவருக்கு எதுவுமே நினைவில்லையாம். படப்பிடிப்பில் இருக்கும் அனைவரும், கஜோலின் அருகே செல்ல யாரையுமே அவருக்கு நினைவுக்கு வரவில்லை. இதைப்பார்த்த கரண் ஜோகர், ஷாருக்கான் போன்ற அனைவரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அங்கு இருந்த அனைவரையும் கஜோலுக்கு நினைவுக்கு வர, அப்போதுதான் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர். ஷாருக்கானும், கஜோலும் பல ஆண்டுகளாகவே நண்பராக இருக்கின்றனர். திரையில் ஷாருக்கான் – கஜோல் ஜோடி சேர்ந்தாலே அப்படம் சூப்பர் ஹிட் தான். ஷாருக்கானுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல், அவர் நடித்த பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் கஜோல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் ஜீரோ என்ற படத்தில் கவுரவ தோற்றத்தில் கஜோல் நடித்தார். கஜோலின் திருமணத்தின் போது நடந்த மெஹந்தி நிகழ்ச்சியில், ஷாருக்கான் தன் மனைவி கௌரி மற்றும் மகன் ஆரியன் உடன் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
கஜோலை விமர்சித்த ஷாருக்
கஜோலை பற்றி இன்னொரு தகவலும் வெளிவந்திருக்கிறது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான், கஜோலுடன் நடிக்கும் முன்பு, அவருடன் நடிக்கலாமா என்று ஷாருக்கானிடம் கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஷாருக்கான் கஜோலுடன் “பாசிகர்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அமீர்கான் அப்படி கேட்டதும் ஷாருக்கான் “கஜோல் ரொம்ப மோசம், அவருடன் சேர்ந்து நடிக்கவே கூடாது” என்று கூறி இருப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பின்போது கஜோலின் நடிப்பு பிடிக்காமல் ஷாருக்கான் அமீர்கானிடம் அப்படிக் கூறியிருக்கிறார். அதன்பிறகு அவர்கள் நடித்த படம் ஹிட்டாவுடன், கஜோலுடன் சேர்ந்து நீங்கள் தாராளமாக நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார் ஷாருக்கான்.