சினிமா நடிகைகளுக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர் சீரியல் நடிகைகள்.

முயற்சிக்கும் நடிகைகள்

நடிகைகள் என்றாலே ஒரு தனி மதிப்பும், மவுசும் இருக்கத் தான் செய்கிறது. அனைவருக்கும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற கனவு எப்பொழுதும் இருக்கும். டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்று தங்களது முயற்சியை செய்துகொண்டு தான் இருக்கின்றனர். நடிப்புத்திறனாலும், அழகான தோற்றத்தாலும் பலபேர் அதனை நிரூபித்துக் கொண்டே வருகின்றனர். நடிகைகள் என்றாலே கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் அனைவரிடத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

எப்போதும் கவரும் கவர்ச்சி

டிவி தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும் சமீபகாலமாகவே இந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். முன்னணி நடிகைகள் பலரும் இந்த ஊரடங்கு சமயத்தில் ரசிகர்களுக்கு அவ்வப்போது தாங்கள் இருப்பதை நினைவுபடுத்தும் வகையில், ஃபோர்ஸ் உடையணிந்து உடற்பயிற்சி செய்வதும், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். பல படங்கள் நடித்திருந்தாலும், தரமான ஹிட் கொடுக்காத பல நடிகைகளும் இந்த கவர்ச்சியை கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த மோகம் டிவி தொகுப்பாளினிகளையும், செய்திவாசிப்பாளர்களையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். டிவி தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது பல பிரம்மாண்ட உடைகளை அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்கள் அனைவரும் சமீபகாலமாகவே கவர்ச்சியான உடைகளில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

களமிறங்கிய டிவி நடிகைகள்

ஊரடங்கு சமயத்தில் வருவாய் ரீதியாக அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னணி நடிகர், நடிகைகள் தங்களை பெருமளவு பிரபல படுத்திக்கொள்ள பல வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் இணையதளத்தில் பிஸியாக இருப்பதை தெரிந்துகொண்ட சினிமா நட்சத்திரங்கள், அவர்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி என்ற யுக்தியை கையாண்டு கொண்டிருக்கின்றனர். நடிகைகளை விட நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் அளவிற்கு சீரியல் நடிகைகளும், தொகுப்பாளர்களும் பல வகையான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகைகளின் புகைப்படங்களை பார்த்துப் பழகிய ரசிகர்கள், டிவி தொகுப்பாளர்களோ, செய்தி வாசிப்பாளர்களோ திடீரென்று ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டால் அதை திரும்பிப் பார்க்கின்றனர். சமீபத்தில் டிவி தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி பதிவிட்ட ஒரு கவர்ச்சிப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதுபோல் திவ்யா துரைசாமி தனது புகைப்படத்தை வெளியிட்டு, சுசீந்திரன் இயக்கும் ஒரு புதிய படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here