திருமணம் குறித்து பேசியதால் நடிகை வனிதா விஜயகுமார் தன்னை மோசமாக பேசியதாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சை திருமணம்

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் அவரது திருமணம் இப்போது வரை சர்ச்சையாகத் தான் உள்ளது. இவர்களது திருமணம் குறித்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சிக்க, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என திரைப் பிரபலங்களும் விமர்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வனிதா விஜயகுமார், தன்னுடைய திருமணத்தை பற்றி பேச நீங்கள் யார் என்று கடுமையாக சாடினார். இதனால் இருவரும் தாங்கள் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டனர்.

திருமணம் குறித்து கருத்து

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், வனிதாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் வனிதாவின் திருமணம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும் எந்த சட்டமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியிருந்தார். வனிதாவை தனக்கு ரொம்பவே பிடிக்கும் எனத் தெரிவித்திருந்த அவர், தான் வனிதாவின் மிகப்பெரிய ரசிகன் எனவும் கூறினார். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், மீடியா உதவியை நாடியிருப்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ரவீந்திரன் சந்திரசேகர் கூறினார். இதனை பார்த்து போபமடைந்த நடிகை வனிதா விஜயக்குமார், தயாரிப்பாளர் ரவீந்திரனை சரமாரியாக விளாசியுள்ளார்.

விளாசிய வனிதா!

இதுதொடர்பாக பேசிய ரவீந்திரன், வனிதா தன்னை மோசமாக விமர்சித்ததாக குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வாட்ஸ் அப்பில் ஆடியோ மெஸேஜ் அனுப்பிய வனிதா, கால் செய்து பேசுங்கள், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதால் நாளை பேசுகிறேன் என்று கூறினேன். மேலும் தனது திருமணம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேளுங்கள். படமெடுத்து பிரபலமாக பாருங்கள், என்னைப் பற்றி பேசி பிரபலமாகதீர்கள். இப்படி என்னை வைத்து பப்ளிசிட்டி வாங்குவதற்கு நீங்கள் சாப்பிடாமல் இருக்கலாம், குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருக்கலாம். உங்களுக்கு வெட்கமே இல்லையா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவினைப் பற்றி பேசி பிரபலமானவர் தானே நீங்கள். உங்கள் மனைவி, மகளை பற்றி நாங்கள் விமர்சிக்கலாமா? என்பது போன்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வனிதா இஷ்டத்திற்கும் பேசியதாக தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினியை விளாசிய நிலையில், தற்போது தயாரிப்பளர் ரவீந்திரனையும் வனிதா கடுமையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here