தமிழ் சினிமாவில் வளர்ந்து இளம் நடிகையான பிரியா பவானி சங்கர் குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியமான பிரியா

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். அழகாலும், நடிப்புத் திறனாலும் வெள்ளித்திரையில் ஜிலிக்கும் இவர், முதலில் சீரியல்களில் நடித்து பல வெற்றிகளை கொடுத்தார். அதனை வெள்ளித்திரையிலும் தொடர்ந்து வருகிறார். அவரது அழகான நடிப்பும், வசீகரிக்கும் அழகும், கவர்ச்சி இல்லாத உடையும் அனைவரையும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக முன்னேறி வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கரிடம், அனைத்து நடிகைகளும் கவர்ச்சி என்ற யுக்தியை கையாண்டு வரும் சமயத்தில் நீங்கள் மட்டும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தால் நிலைத்து நிற்க முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “கவர்ச்சி எல்லாம் ஒத்துவராது” என்று பதிலளித்தார். ஊரடங்கு சமயத்தில் அனைத்து நடிகைகளும் தனது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல போட்டோஷூட்ஸ் நடத்தி அதனை வெளியிட்டு வரும் இச்சமயத்தில், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை ஈர்க்கிறார் பிரியா பவானி சங்கர்.

குரங்குடன் நடிகை

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிலளித்துக் கொண்டே இருப்பார். எஸ்.ஜே. சூர்யா உடன் இவர் நடித்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாகக் கவர்ந்தது. அப்படத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்து வைத்துள்ளார். அவர் வெளியிடும் அழகான புகைப்படங்களுக்கு அதிக ரசிகர்கள் இருந்து கொண்டு இருக்கும் வேலையில், இந்த ஊரடங்கு சமயத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் பெரும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புதிய படத்தில் அவர் 2 சிம்பன்ஸி குரங்குகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு குரங்கு அவர் இடுப்பை பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்க, மற்றொரு குரங்கு அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்தும் கமென்ட் செய்தும் வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் “எனக்கு ஒன்னு கொடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சி கமென்ட் போட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் கமென்டஸ்

இன்னொரு ரசிகர், “நான் இருக்க வேண்டிய இடத்துல அந்தக் குரங்கு இருக்கே” என செல்லமாக கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல், அவர் வெளியிட்டிருக்கும் மற்றொரு புகைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. புலிக்குட்டியை கையில் வைத்துக்கொண்டு அவர் முத்தமிடும் புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தையும் கவனித்த ரசிகர்கள் புலியும், குரங்கும் மிகவும் கொடுத்து வச்சது” என்று பொங்கியுள்ளனர். பலரும் லைக்ஸ்களையும், கமென்ட்ஸ்களையும் அள்ளி வீசுகின்றனர். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் லைக்ஸ் வரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here