அல்லு அர்ஜுன் – பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘புட்ட பொம்மா’ பாடல் 1 பில்லியன் யூடியூப் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் – பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘அல வைக்குந்தாபுராமுலு’ படத்தில் இடம்பெற்ற “புட்ட பொம்மா” பாடல், மொழி தெரியாத மக்களும் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலின் டான்ஸ் ஸ்டெப் அனைவரையும் வெகுவாக ஈர்த்துவிட்டது. தெலுங்கு மொழியில் வெளியான இந்த பாடல் டிக் டாக்கில் படு பேமஸ் ஆனது. இந்தப் படத்தின் பாடல்கள் மொழிகளைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் 1 பில்லியன் யூடியூப் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்து தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.

மாபெரும் சாதனை

“புட்ட பொம்மா” பாடல் யூடியூபில் 251 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இரண்டாவது இடத்திலும், 54 ஆயிரம் கமெண்ட்ஸ்களை பெற்று முதல் இடத்திலும், 1.9 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்று முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதனை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

முதன்முதலாக இணையும் ஜோடி

இதனிடையே ராஷ்மிகா மந்தனாவும் அல்லு அர்ஜுனும் இதுவரை எந்த ஒரு படத்திலும் ஜோடி சேராமல் இருந்த நிலையில், தற்போது புஷ்பா என்ற படத்தில் முதல்முறையாக இணைவதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தாலும், படக்குழு முதலில் ஹீரோயினாக நடிக்க அணுகியது நடிகை சமந்தாவை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here