நான் குண்டாக இருப்பதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என பிரபல நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

குண்டும் அழகு தான்

சினிமா துறையில் நடிகைகள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். ஆனால் ஒல்லியாக இருக்கும் ஹீரோயின்களை விட, குண்டாக இருக்கும் ஹீரோயின்களும் வெற்றிபெற்று கொண்டுதான் இருக்கின்றனர். அந்தவகையில் குஷ்பு முதல் நித்யா மேனன் வரை பல ஹீரோயின்களுக்கு குண்டான தோற்றமே அழகாக இருக்கிறது. இந்த நிலையில், தன்னை குண்டாக இருப்பதாக விமர்சித்தவர்களுக்கு நித்யா மேனன் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப்பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நித்யாமேனன். எத்தனை மொழிகளை கடந்தாலும் பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், கனவுகளும் பலருக்கு உண்டு. அந்த வகையில் நித்யா மேனனும் பாலிவுட்டில் மிஷன் மங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நித்யா மேனனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நித்யா மேனன், அதன் விளம்பரத்திற்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

தேவையில்லாத விஷயம்

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், பாடி ஷேம்மிங் என்று அழைக்கப்படும் உடலைப் பற்றிய மோசமான விமர்சனங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது; இதுபோன்ற விமர்சனங்கள் நம்மை அதிகமாகவே பாதிக்கும். ஆனால், நாம் செய்வதைவிட பல நல்ல விஷயங்களை செய்யும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எப்போதும் விமர்சிக்க மாட்டார்கள். எதுவுமே செய்யாதவர்கள் தான் தேவை இல்லாத விஷயங்களையும், விமர்சனங்களையும் செய்து வருவார்கள். உடல்ரீதியாக ஏதாவது பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்று பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இதைப்பற்றி எதையும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களை எப்பொழுதும் நான் பேசுவதும் இல்லை, அதனை ஊக்குவிப்பதும் இல்லை என்று பதில் கொடுத்துள்ளார்.

சிறந்த நடிகை

மேலும், சினிமா துறையில் உள்ள அனைவரும் ஒரு நடிகை குண்டாக இருக்கிறாரா அல்லது ஒல்லியாக இருக்கிறாரா என்று விமர்சிப்பதையே பெரிதாக கருதுகின்றனர். இவ்வாறு நித்யா மேனன் கூறியுள்ளார். நித்யா மேனன் நடித்த ஓ காதல் கண்மணி திரைப்படம் பெரியஅளவில் ஹிட்டானது. அதன்பிறகு இருமுகன், மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார். அதில் அவரது கேரக்டர் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here