2021ம் ஆண்டு சுஷாந்திற்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாக அவரது தந்தை கூறியுள்ளது சுஷாந்த் ரசிகர்களின் வேதனை அடையச் செய்துள்ளது.

உடைந்து போன ரசிகர்கள்

பாலிவுட் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா சினிமா துறையினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது சுஷாந்த் சிங்கின் மரணம். பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணச் செய்தியை அறிந்து திரைத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ந்து போயினர். அவர் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல என்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அவர் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்று மும்பை போலீசார் கூறுகின்றனர். அதனை சுஷாந்த் ரசிகர்கள் ஏற்பதாக இல்லை. பலரும் பல தரப்பில் தங்களுடைய எதிர்ப்பையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பின்புலம்

சுஷாந்த் மரணத்திற்கு காரணம் சினிமா பின்புலம் உள்ள சில முக்கியமான நடிகர்கள் தான் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், தனியாக, சொந்தமாக, கஷ்டப்பட்டு நடிக்க வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர்களுக்கு சரியான திறமை இருந்தாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சில முன்னணி நடிகர், நடிகைகளின் மீது வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் மரணத்தின் மர்மத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பதிவுகள் மாயம்

இந்நிலையில், சுஷாந்த் சிங் பெயரில் உள்ள சில டுவீட்டுகள் டெலிட் செய்யப்பட்டதாக அவரது சகோதரி புகார் கூறியிருந்தார். அந்த குற்றச்சட்டையும் சேர்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சுஷாந்தின் வீட்டில் அவரது படத்தை வைத்து பூஜை செய்து வந்த நிலையில், அவரது தந்தை மட்டும் அருகில் அமர்ந்திருந்த மாதிரியான ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவியது. இந்த புகைப்படம் சுஷாந்த் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பலரையும் நெஞ்சைப் பிழியும் அளவிற்கு வருத்தத்தை தந்தது.

ரசிகர்கள் கவலை

சுஷாந்த் சில வருடங்களுக்கு முன்பு அங்கிதாவை காதலித்ததாகவும் அந்த காதல் முடிவடைந்ததை அடுத்து, சில வருடங்கள் கழித்து ரியா சக்ரபோர்த்தியை காதலித்து வந்ததாகவும் அனைவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்திற்கு அடுத்த வருடம் திருமணம் செய்வதாக நாங்கள் முடிவெடுத்து இருந்தோம் என அவரது தந்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; சுஷாந்த் என்னிடம் கடைசியாக பேசும்போது நான் திருமணத்தைப் பற்றி கேட்டேன், ஆனால் அவன் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள தயார் என்று சொன்னான். அதன்பிறகு திருமணத்தைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார். சுஷாந்த் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here