திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான மாளவிகா மோகனன் நடிகை நயன்தாரா வாங்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாளவிகா மோகனன்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் இதற்குமுன் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில், ஒருபடத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை கண்டு சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர். மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்த நடிகைக்கு அதிக மார்க்கெட் இருக்கிறதோ, அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். தற்போது வரும் படங்களில், முன்னணி நடிகைகள் ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதுமுக நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ரூ.5 கோடி சம்பளம்?

இந்த நிலையில், இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர். இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், மாளவிகா மோகனன் அவரை முந்திவிட்டார் என்கின்றனர் திரைத்துறையினர்.

புதுமுக நடிகைகளின் ராஜ்யம்

இதுவரை நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், திரிஷா ஆகியோர் மட்டுமே முன்னணி மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், இவர்கள் காம்பினேஷனில் வரும் படங்களுக்கு போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எல்லோருமே புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து வருகின்றனர். நடிகர்கள், பெரும்பாலும் இந்த நடிகை தங்களது படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிலருக்கு சிபாரிசும் செய்து வருகின்றனர். கதைக்கு ஏற்பவும் சிலர் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.

இளம் நடிகைகள்

அண்மைக்காலமாக, நிவேதா பெத்துராஜ், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், கல்யாணி பிரியதர்ஷன் என்று வளர்ந்து வரும் நடிகைகள்தான், மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகின்றனர். இதில், புதுமுக நடிகைகளுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர், இதற்கு முன்னதாக சிம்பு உடன் இணைந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைத்துறையில் இளம் நடிகைகளின் ஆதிக்கம் ஆவதால், முன்னணி நடிகைகள் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here