பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் டால்பினுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிக் கொடி

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். தனது நடிப்பை மக்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தெலுங்கிலும், தமிழிலும் நடிக்க துவங்கினார். அவர் நடித்த அனைத்துப் படங்களும் கைகொடுக்க, பாலிவுட்டில் கால் பதித்தார். இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர்கள் அனைவரும் உதவி வந்த நிலையில், நடிகைகள் யாரும் உதவவில்லையே என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. ஆனால், அமைதியாக தனது வீட்டின் அருகில் இருக்கும் குடிசைவாழ் மக்களுக்கு அன்றாடம் தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இந்த உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்தது தான் ஹைலைட். இருப்பினும் சில நாட்களுக்கு பிறகு அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

கட்டுக்கோப்பான உடல்

பொதுவாக நடிகை, நடிகர்கள் அனைவரும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும் அளவில் முயற்சிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் ரகுலும் தனது உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள பெருமளவில் மெனக்கெட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் அவர் பதிவிடும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல்தான். அதிலும் வௌவால் போன்று அவர் தலைகீழாக தொங்கியது அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்தது.

சமைக்க பிடிக்கும்

எப்போதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நடிகைகளுக்கு இந்த ஊரடங்கு ஒரு வரம் என்றே சொல்லலாம். குடும்பத்துடன் நேரத்தை கழித்தும், வித விதமாக சமையல் செய்தும் வருகின்றனர். அதிலும் கேக் செய்து அசத்தும் சில நடிகைகள் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகவே செய்து வருகின்றனர். அதனை பார்க்கும் அவரது ரசிகர்களும் பல லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை பதிவு செய்தும் வருகின்றனர். நடிகைகள் பொழுதுப்போக்குக்காக தனது செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது வழக்கமான ஒன்றுதான். நாய்க்குட்டி, பூனைக்குட்டி வைத்துக்கொண்டு விளையாடுவதெல்லாம் பழைய ஸ்டைல் எனக்கூறும் அளவிற்கு டால்ஃபினுடன் கொஞ்சி விளையாடும் த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இதை பார்த்த அவரது ரசிகர்களும் பல லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் ஒரு படி மேலே போய் “சோ ப்ரெட்டி போத் ஆப் யூ” என்று கமென்ட் செய்துள்ளார்.

டிரெண்டிங்கில் ரகுல்

பொதுவாகவே நடிகைகள் விலங்குகள் மற்றும் சில வித்தியாசமான பிராணிகள் மீது அன்பு காட்டுவதும், அவைகளுடன் செல்பி எடுத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. எதார்த்த வாழ்க்கையில் ஒரு சாமானிய மனிதன் விலங்குகள் மீது அக்கறை காட்டுவது சாதாரணமாகவே பார்க்கப்பட்டாலும், நடிகைகள் காட்டும் அழகான போட்டோகிராஃப் மிகவும் ஸ்பெஷல் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. நடிகைகள் செல்லப்பிராணிகளிடம் கொஞ்சி விளையாடும் விதத்தை ரசிகர்கள் கமென்ட் செய்வதும், ஷேர் செய்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இப்போதைக்கு ட்ரெண்ட் ரகுல் தான் என்று நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here