மின்னலே 2 படத்தில் தான் நடித்தால் “யானைக்கு உள்ளாடை அணிவது போல தான் இருக்கும்” என்று நடிகர் மாதவன் கிண்டலடித்துள்ளார்.

‘மின்னலே’

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த படம் மின்னலே. வருமான ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், இப்படத்திற்கு நல்ல டாக் இருந்தது. இதில் ரீமா சென், விவேக், அப்பாஸ் அனைவரும் அவர்களது பங்கிற்கு நன்றாகவே நடித்து இருப்பார்கள் என்றே சொல்லலாம். மாதவனின் கேரியரில் முக்கியமான படங்களை எடுத்துக்கொண்டால் அதில் மின்னலே படமும் ஒன்றாகும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அமைந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹிந்தி ரீமேக்

மின்னலே திரைப்படத்தின் வரவேற்பை புரிந்துகொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை rehnaa hei teree dil mein என்ற பெயரில் ஹிந்தியில் உருவாக்கினார். அதிலும் மாதவன் தான் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக தியா மிர்சா அறிமுகமானார். ஹிந்தியில் சைப் அலி கான், அனுபம் கேர் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து படத்திற்கு பலம் சேர்த்து இருப்பார்கள். இந்நிலையில் இப்போது இருக்கும் லாக் டவுன் சமயத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் த்ரோபேக் புகைப்படம் என்று பல புகைப்படங்களையும், சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன் ஹிந்தி ரீமேக்கான மின்னலே படத்திலிருந்து ஒரு சில காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கிண்டலடித்த மாதவன்

அதை பார்த்த ரசிகர்களும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதைப்பற்றி பல பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டே இருந்தது. இதுபற்றி நடிகர் மாதவன் கூறுகையில்; மின்னலே படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வதந்திகளை நானும் படித்துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு அதுபற்றி சுத்தமாக ஒன்றுமே தெரியாது. எனக்கும் தியாவுக்கும் வயதுக்கேற்ற கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த வயதில் நான் மின்னலே இரண்டாம் பாகத்தில் நடித்தால் யானைக்கு உள்ளாடை அணிவது போல இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் நம்பிக்கை

மாதவனின் பதிவைப் படித்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முடியாது என்று ஒன்றுமில்லை. உங்களால் முடியும், நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நடிக்கலாம், நீங்கள் புத்திசாலியான நடிகர், நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால்போதும் ரசிகர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக ஒரு விருந்தை அளிக்கலாம் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கு மாதவனும், கௌதம் மேனனும் செவி சாய்ப்பார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here