நடிகை சமந்தா முத்தம் கொடுத்த அவரது தோழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பிஸி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்த சமந்தா அவரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் கூட நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைத்தளத்தில் படு பிஸியான அவர், தனது புகைப்படங்களையும், பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மாடி தோட்டத்தில் விவசாயம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து நானும் விவசாயிதான் என்றார்.

தோழிக்கு முத்தம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது தோழியும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியை சமந்தா சந்தித்தார். அப்போது ஷில்பா ரெட்டியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட அவர், அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டார். அத்துடன் ஷில்பா ரெட்டியின் வளர்ப்பு நாய்களுடன் சமந்தா விளையாடும் வீடியோவும் வெளியானது. இந்த நிலையில், ஷில்பா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமந்தாவுக்கு கொரோனா?

முத்தமிட்ட தோழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோழிக்கு கொரோனா இருப்பதால் அவரை சந்தித்த சமந்தாவுக்கும் நோய் தொற்று தாக்கி இருக்குமோ என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கவலை தெரிவித்து வருகின்றனர். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, மற்றும் அஸ்வின் சரவணன் இயக்கும் திகில் படங்களுக்கு சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here