கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கவர்ச்சியில் முதலிடம்

நடிகைகள் தங்களை அடிக்கடி வெளியே ஏதாவது ஒரு வகையில் காட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிய யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழும் அவர், அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரைப் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவரது ரசிகர்கள் குஷிப்படுத்தியுள்ளார்.

ஆபாசமாக திட்டிய யாஷிகா

தனது கவர்ச்சி புகைப்படங்களைத் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், நீங்கள் ‘மியா காலிஃபா’ போல் இருக்கிறீர்கள் எனக் கிண்டலடித்துள்ளார். இதனால் கடுப்பான யாஷிகா ஆனந்த், அவரை மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்துள்ளார். மேலும் என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்திலிருந்து அதிகம் திட்டினேன் என்றும் சம்மந்தமே இல்லாத நபருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றும் கூறியிருந்தார். என்னதான் யாஷிகா உருக்கமாகப் பேசினாலும், ரசிகரை இதுபோன்று பேசியது தவறு என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.

யாஷிகா vs ரேஷ்மா பசுபுலேட்டி

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்தின் மூலம் ரேஷ்மா ஓரளவுக்கு பிரபலமானலும், அவரை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். ரேஷ்மாவும், யாஷிகா ஆனந்த்க்கு இணையாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைக் கண்ட நெட்டிசன்களோ அவரை “ஆஹா ஓஹோ” என புகழ்ந்து வருகின்றனர். மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என தொடங்கி, தேவதையை விட அழகு எனும் வரைக்கும் பலரும் கமெண்ட் செய்து அவரின் அழகை மெய்ச்சியுள்ளனர். அதில் ஒருவரது கமெண்ட் மட்டும் தனியாக தெரிந்தது. ரேஷ்மாவின் புகைப்படத்தை பார்த்தவர், யாஷிகாவுக்கே சவால்விடும் பேரழகி என கூறியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்களே இருந்தாலும், பலரது மனதை கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா. ஏற்கனவே பரீட்சியப்பட்ட முகம் என்பதால், அவரை பல ரசிகர்கள் ஆதரித்தனர். ஆனால் ரேஷ்மாவின் இரட்டை நிலைப்பாடு காரணமாக போட்டியிலிருந்து விலகி வெளியேறிவிட்டார். தற்போது யாஷிகா ஆனந்த்தும் – ரேஷ்மா பசுபுலேட்டியும் மட்டுமே கவர்ச்சியில் போட்டி போடுவதாக ரசிகர்களின் கணக்குப் போட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here