சில்வியாவுக்கும் எங்களுடைய விவாகரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனக் கூறியுள்ள சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி, சாண்டி என் கணவரே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

திருமணம், மறுமணம்

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய காஜல் பசுபதி, பின்னர் சினிமாவிற்குள் நுழைந்து நடிகையாக மாறினார். கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். காஜல் பசுபதி நடன இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிறிது காலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து சில்வியா என்ற பெண்ணை சாண்டி மறுமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தாஷா எனும் பெண் குழந்தை உள்ளது.

நெட்டிசன்ஸ் சாடல்

இந்த நிலையில், சமீபத்தில் தனது மனைவி சில்வியாவுக்கு சமூக வலைதளப்பக்கத்தில் சாண்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சில்வியாவை கடுமையாக விமர்சித்தனர். வஞ்சகமாக செயல்பட்டு காஜலின் கணவரை சில்வியா திருமணம் செய்துகொண்டதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

காஜல் பதிலடி

இதனை பார்த்து வேதனை அடைந்த சாண்டியின் முன்னாள் மனைவி காஜல், சில்வியாவுக்கு ஆதரவாக பதில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கடவுளே அவர்களை தனியாக விட்டுவிடுங்கள். அது எனது தவறுதான் என நான் எத்தனை முறை செல்வது. அந்தக் காலத்தில் வெறிப்பிடித்திருந்த நிலையில் இருந்த நான், சாண்டிக்கு கொஞ்சமும் நிம்மதியை கொடுக்கவில்லை. நாங்கள் 2012ம் ஆண்டே பிரிந்துவிட்டோம். சில்வியாவுக்கும் எங்களுடைய விவாகரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாண்டி இப்போது என் கணவரே இல்லை எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here