விஜய் டிவி தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது குறித்து நடிகை ரம்யா பாண்டியன் சூசகமான பதில் அளித்துள்ளர்.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. தற்போது ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறாமல் இருந்தாலும், பிக் பாஸ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

ரம்யா பாண்டியன்

இது ஒருபுறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் நடிகை ரம்யா பாண்டியன் இடம்பெறுகிறார். தற்போது ரம்யா பாண்டியனுக்கு என தனி ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. இவர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் உள்ளது. எனவே இதை மனதில் வைத்துக்கொண்டு, ரம்யா பாண்டியனை பிக் பாஸ் சீசன் 4ல் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், பிக் பாஸிலிருந்து இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் ரம்யா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

பட்டியல் ரெடி?

அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிவாங்கி, புகழ், மணிமேகலை புகழ்பெற்றவர்கள். இவர்களது சேட்டைகளை இரசிப்பதற்கு என்று மக்கள் உள்ளனர். அதையும் கருத்தில் கொண்டு இவர்களை எல்லாம் அவர்களது லிஸ்டில் வைத்திருக்கின்றனர். இவர்களுடன், நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் ஆகியோரும் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க காத்திருப்பதாகவும் தெரிவிகிறது. பிக் பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், 4வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்றும் வதந்தி பரவியது. ஆனால் இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சீசன் துவங்கும் முன்பும் அவர் கலந்து கொள்கிறார், இவர் பங்கேற்கிறார் என்று ஒரு பட்டியல் வலம் வருவதும், இறுதியில் அது பொய்யாவதும் வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகியுள்ள பட்டியலாவது உண்மையாகுமா என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here