முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேஹாஷிஸ் உட்பட அவரது வீட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

செப்டம்பரில் ஐபிஎல் சாத்தியம்

ஆஸ்த்ரேலியாவில் இந்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையே நடக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதம் செப்டம்பர் 26- நவம்பர்8 வரை 13வது ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கங்குலி. இர்ஃபான் பதான் போன்ற முன்னால் வீரர்கள் அவரது இந்த முன்னெடுப்புகளைப் பாராட்டியுள்ளனர்.

நாசர் ஹுசைன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய புரட்சியைத் தொடங்கி வைத்தவர் சௌரவ் கங்குலி. மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு தத்தளித்து வந்த இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை எப்படி அன்று கையில் எடுத்து சீர்செய்தாரோ. அப்படியே இன்றும் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ்தான் இந்தியா அயல்நாடுகளில் சென்று வெள்ள முடியும் என்று நம்பியது. அவர் இனம்கண்ட வீரர்கள் இன்று சர்வதேச அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். கங்குலியின் அதே போர்க்குணம் கோலியிடம் இருப்பதைப் பார்க்கிறேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் நாசர் ஹுசைன் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி தலைவராகிறார் தாதா

சென்ற வருடம் பிசிசிஐயின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி விரைவில் போட்டியின்றி ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. முன்னால் தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரஹாம் ஸ்மித் உட்பட்ட பலர் இதை வழிமொழிந்துள்ளனர்.

கங்குலி வீட்டில் யாருக்கும் கொரோனா இல்லை

அம்பன் புயலையடுத்து கொரோனா நிவாவரனப் பணிகளிலும் கங்குலி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவர் அண்ணன் ஸ்னேஹஷிஷ் அவருக்கு முன் ரஞ்சி போட்டிகளில் விளையாடியவர். அவர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் மூலம் அவரது மனைவி, மாமனார், மாமியாருக்கும் தொற்று பரவியுள்ளதாகத் தெரிகிறது. நான்குபேருக்குமே உடல் நலக் குறைவு இருந்ததால் தொற்றுக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் யாரும் கங்குலியின் பூர்வீக பேதாலா வீட்டில் வசிக்கவில்லை. அதனால் கங்குலி உள்ளிட்ட அவர் குடும்பத்தினருக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here