விஜய்தேவரகொண்டா நடிக்கும் படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நடிகை சார்மி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்ஸ்டாவில் பிஸி

தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை சார்மி, தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டிராகிராமில் விளையாட்டுத் தனமாக சர்ச்சைக்குரிய சில பதிவுகளை வெளியிட்டு பல பிரபலங்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

சர்ச்சை வாழ்த்து

இம்மாதம் 4ம் தேதி நடிகை திரிஷாவின் 37வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பலரது வாழ்த்துக்கள் வழக்கமாக இருந்த நிலையில், நடிகை சார்மியின் வாழ்த்து மட்டும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருந்தது. அவர் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும், அது தற்போது சட்டப்படி செல்லும் என்றும் கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார். சார்மியின் இந்த வாழ்த்து திரிஷா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.

திரிஷா சம்மதம்

சார்மியின் வாழ்த்துக்கு பதிலளித்த திரிஷா, நான் எப்போதே அதற்கு சம்மதம் சொன்னேனே என்றுக் கூறி மேலும் அதிர்ச்சியடைய வைத்தார். இருவரும் விளையாட்டாக அதைப் பகிர்ந்து கொண்டாலும், ஓரினச் சேர்க்கை திருமணம் இந்தியாவில் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றமே சொன்னாலும், இந்த செயல் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணங்களைத் தூண்ட வேண்டாம் எனவும் பலர் கருத்து கூறினர். மேலும் பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது சிறந்தது எனவும் பலர் தெரிவித்தனர்.

வதந்தி, விளக்கம்

நடிகை சார்மி தற்போது படத்தயாரிப்பில் பிசியாக உள்ளார். விஜய்தேவரகொண்டா நடிக்கும் அந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் குறித்து பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து சார்மி கூறுகையில்; ”கதை உள்ளிட்ட எதுவும் மாற்றப்படவில்லை. கொரோனா நெருக்கடி தீர்ந்த பின், படப்பிடிப்பு துவங்கும். படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்,” என பதிலளித்துள்ளார். சார்மி தயாரிக்கும் இப்படம் ஹிந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here