சில திரைப்பட பிரபலங்கள் கூட அவங்களோட இன்ஸ்டா பேஜ்ல வேடிக்கையா அவங்களோட ஃபேஸ் ஆப் படத்த பதிவிட்டிருக்காங்க. இந்த ரெண்டு நாளா பேஸ்புக்ல அதுதான் டிரெண்டாகிட்டு  இருக்கு. அதப் பாக்கும்போது நாளைக்கு பெரிய சிஜியோ,மேக்கப்பாவோ இல்லாம ஒரு ஹீரோ ஹீரோயினாவும், ஹீரோயின் ஹீரோவாவும் நடிக்கிற நாள் ரொம்பதூரம் இல்லன்னு தோனுது. அந்த விதத்துல தசாவதாரமும், கோச்சடையானும் வே அஹெட் ஆஃப் டைம்!

டெக்னாலஜி முக்கியம் அமைச்சரே

லியனார்டோ டாவின்சியோட மோனலிசா பெயிண்டிங் ரொம்ப ஃபேமஸ். அந்த காலத்து ராஜாங்க எல்லாம் அந்த மாதிரி அவங்க மனைவியை ஒரு ஓவியமா வரஞ்சு வெச்சிருப்பாங்க. அப்படியே கட் பண்ணி பாப் கல்சருக்கு  வந்தீங்கன்னா ஆண்டி வார்ஹான் ஓட மர்லின் மன்றோ பெயிண்டிங் ரொம்ப ஃபேமஸ். இப்படி பெரிய பெரிய ஓவியர்கள் எல்லாம் வரைஞ்ச பெயிண்டிங் ப்ரிஸ்மான்னு ஒரு ஆப் செய்யறத பார்க்கரப்போ பிரமிப்பா இருந்தது.

கமல் எனும் கலைஞன்

சினிமா வந்ததுக்கப்புறம் ஒப்பனைக் கலைக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. சின்ன வயசு காரங்களுக்கு வயசானவங்க வேஷம் போடுவது, ஆம்பளைங்களுக்கு பொம்பளையா மாறு வேஷம் போடுவது, பொம்பளைங்க ஆம்பளையா மாறுவேஷம் போடுவதுன்னு குட்டி குட்டி கதாபாத்திரங்கள் செஞ்சு பார்த்தாங்க. அதுக்கப்புறம் கமலஹாசன் அவ்வை சண்முகி படத்தில் கிட்டத்தட்ட பாதி படத்துக்கு மேல ஒரு பொண்ணாவே மாறுவேஷம் போட்டு நடித்தார்.

கண்ணோடு கான்பதெல்லாம்

சிங்காரவேலன் படத்தில் தான் முதல் முதல்ல மேக்கப் போடாமலேயே கிராபிக்ஸில் சின்ன வயசு குஷ்புவை பெரிய பொண்ணா மாத்துற ஆர்டிஸ்ட சைண்டிஸ்ட் ரேஞ்சுக்கு காட்டுனாங்க. டெக்னாலஜி அட்வான்ஸ் ஆனப்பகூட கில்லி படத்துல பிரகாஷ்ராஜ் விஜயோட அடையாளங்களை சொல்ல சொல்ல ஒருத்தர் போட்டோஷாப்ல வரஞ்சு அது பாட்டு பாடாவா ஜெமினி கணேசன் முகம் வருமே. இனிமேல் அந்த சீன் எந்த படத்திலும் வராது.
ஏன்னா எப்படி ப்ரிஸ்மாங்கற ஒரு ஆப் ஒரு ஆர்டிஸ்ட் ஓட வேலைய செஞ்சதோ அதே மாதிரி சமீபத்தில் வந்த ’ஃபேஸ் ஆப்’ ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் செய்கிற வேலையை செய்து. இந்தியன் படத்துக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க செலவானது பற்றி கமலஹாசன் பேட்டியில் சொன்னார். இனிமேல் அனேகமா எல்லாத்தையும் இந்த ஆப்பை செஞ்சிடும் போல இருக்கு.

ஃபேக் ஐடி அலர்ட்

ஹே! என்னோட ஃபேஸ் ஆப் போஸ்ட பாரேன்னு நச்சரிச்சிக்கிட்டு இருக்க எல்லாரையும் சைபர் க்ரைம் ஃபேக் ஐடிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் உஷார இருக்கச்சொல்லி எச்சரிச்சிருக்காங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here