பழம்பெரும் பிண்ணனி பாடகர் ஏ.ஏல். ராகவன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

மரணம்

தமிழில் 1957 ஆம் வருடம் வெளியான புதையல் படம் மூலமாக பின்னணி பாடகராக அறிமுகமானவர் ஏ.எல்.ராகவன். பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரான ஏ.எல். ராகவன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மாரடைப்பால் அவர் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81. கடந்த 1933 ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஏல். ராகவன், பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். ‘எங்கிருந்தாலும் வாழ்க’, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர்.

சூப்பர் ஹிட் பாடல்கள்

ஏ.எல். ராகவன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ராகவனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இசை பயணம்

காலத்தால் அழியாத பல சிறந்த பாடல்களை பாடியிருக்கும் ராகவன், பழம்பெரும் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம் மாஸ்டர் உள்ளிட்டோரின் இசையில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here