தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் அட்லீயின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் அட்லீ

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தளபதி விஜய்யுடன் ‘தெரி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களுடன் ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கினார். கடந்த ஆண்டு பிற்பகுதியில் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த கூட்டணி குறித்த தகவல் வெளிவருவதற்கு முன்பு, கொரோனா வைரஸ் தொற்று உலகை உலுக்கியது. குறிப்பாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தயாரிப்பிலும் கவனம்

இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

ஜெயம் ரவியுடன் அட்லீ?

இந்நிலையில், அட்லீ தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது தனது ‘பூமி’ பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். மேலும் மணிரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் தோற்றத்தை மாற்றியமைத்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here