தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்றும் இளமை

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். என்றும் இளமை என்றால் அது நம்ம திரிஷா தான் என ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். 36 வயதை கடந்துவிட்ட திரிஷாவை பார்க்கும் அனைவருமே அவருக்கு 18 வயது என்றுதான் சொல்லத்தோன்றும் அளவிற்கு தனது அழகால் சொக்க வைப்பவர் திரிஷா.

டிக் டாக்கில் திரிஷா

அபியாக, ஜெஸ்ஸியாக, ஜானுவாக கொண்டாடப்படும் திரிஷாவின் இடத்தை, எந்த ஒரு தமிழ் நடிகையும் இதுவரை பிடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. சென்ற மே மாதம் நான்காம் தேதி திரிஷா தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், நடிகை திரிஷா சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here